
வாராய் புதுவரவே.
அழுகை தளும்ப கூக்குரளிட்டு வாராய்..!
பொன் உடலை பூ உலகிர்க்கு காட்ட வாராய்..!
பஞ்சவர்ன கைகளாள் பல்வண்ணம் தீட்ட வாராய்..!
பிறப்பிர்க்கு தகுதியற்ற இப்பூமியை துட்சமாய் என்னி வாராய்..!
பாவிகளோடு பரிசுத்மாய் வாராய்..!
மதிகெட்ட உலகில் ஞான ஒலியாய் வாராய்..!
அழுக்கொண்ட பூமியில் புனித நீராய் வாராய்..!
உல்லாச சாலையில் ஊர்வளமாய் வாராய்..!
எங்கள் குடும்பத்தின் புதுவரவாய் வாராய்..!
எம் கூட்டத்தின் விளையாட்டு பொருளாய் வரபோகும் உன்னை நினைத்து நித்தமும் யோசிக்கிரோம்..!
விளையாட்டுக்கு ஒப்பு கொள்வானோ..?
அணுதினமும் புன்னகைப்பானோ..?
மிகுதியான சினம் கொல்பவனோ..?
புத்தி கூர்மை உல்லவனோ..?சண்டையில் சமாதானம் ஆவானோ.?
அல்லது பிடிவாதம் பிடிப்பவனோ..?
அழகுக்கு இலக்கணம் எழுதுபவனோ..?
நீ மானோ மயிலோ குயிழின் குரளோ.. காயோ கனியோ கனிகளின் சிறப்போ..?
பூமியில் பிறப்பு மணிக்கு பல ஆயிரம் என்பார்கள்..
அவை அனைத்திலும் சிரப்பானவன் நீ என்று அறிகிறோம்.
ஜனனம் முதல் மரணம் வரை உள்ள காலத்தில்,
சேர்ந்து பயணிக்க ,வாழ்வின் சிறப்பை உணர , தன் நிலை அரிய , ஜாபகங்களை சேகரிக்க எங்கள் குடும்பத்தில் ஒருவனாக வலம் வர போகும் உமக்கும் எங்களுக்குமான பந்தம் மிகுந்த சுவையுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.
உன்னை அமிழ்த முத்தங்களுடன் வரவேற்கிறோம்..
இது உன் பிறப்பிர்க்கு ஒரு நாள் குறிப்புக்கு முன் உன் தாய்மாமனாள் எழுதப்படுகிறது…
– தீபன்
